சாலைகள், மேம்பால பணிகளுக்கு நிதி தடை இல்லை.. விரைந்து முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தல்

சாலைகள், மேம்பால பணிகளை மேற்கொள்ள நிதி தடையாக இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் கீழ் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலைகள் மற்றும் பாலப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
அதில், வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், சாலைகளின் தரம் சிறப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும், பாலப் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தேவையற்ற தாமதத்தை தவிர்த்து சாலை மற்றும் மேம்பால பணிகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Comments