"மொழி உணர்வு என்பது தமிழருக்கு எழுத்தாக இல்லாமல் ரத்தமாக உள்ளது..." - முதலமைச்சர் ஸ்டாலின்...!
தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கலிபோர்னியாவில் வட அமெரிக்கா தமிழ் சங்கப்பேரவை சார்பில் தொன்மை தமிழரின் பெருமை என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் காணொளி காட்சி மூலமாக உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு நான்காயிரம் ஆண்டுகள் முந்தையது என்றும், சிந்து சமவெளி மக்கள் பேசியது தமிழ்மொழிதான் என்றும் கூறினார்.
இந்திய துணைகண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்திலிருந்து எழுதப்பட வேண்டுமென்றும், மொழி உணர்வென்பது தமிழருக்கு எழுத்தாக இல்லாமல் குருதி போன்றது என்றும் குறிப்பிட்டார்.
நாட்டிலே அதிகளவிலான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தமிழகத்தில் தான் என்றும் முதலமைச்சர் கூறினார்.
Comments