டிவிட்டரில் எத்தனை பதிவுகளைப் படிக்கலாம்-வரம்பு விதித்தார் எலன் மஸ்க்

0 1917
டிவிட்டரில் எத்தனை பதிவுகளைப் படிக்கலாம்-வரம்பு விதித்தார் எலன் மஸ்க்

டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை பதிவுகளை படிக்கலாம்.. என்ற கட்டுப்பாட்டை எலான் மஸ்க் அறிவித்து உள்ளார்.

நேற்று டிவிட்டர் கணக்குகள் உலகம் முழுவதும் முடங்கின. பலர் எலன் மஸ்க்கை தூக்கத்தில் இருந்து எழுப்புங்கள் என்று பதிவுகளை போட்டனர்.. இந்த நிலையில், டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், தீவிர அளவில் தேவையற்ற தரவுகளை ஒழிப்பது மற்றும் கையாளுவது ஆகியவற்றுக்காக நாங்கள் தற்காலிக வரம்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

இதன்படி, சரிபார்க்கப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும். சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும் மற்றும் புதிய சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளையும் படிக்க முடியும் என அறிவித்து உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments