புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டின் படிக்கட்டுப் இடிந்து விழுந்து பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி...!

மதுரை விளாங்குடியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சொக்கநாதபுரம் முதல் தெருவில் தமிழரசு என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் இந்த சம்பவம் நடந்தது. 5 தொழிலாளர்கள் சிமென்ட் பூசும் பணிகளை மேற்கொண்டு இருந்த போது திடீரென படிக்கட்டுப் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூக்காயி என்பவர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயமடைந்த மேலும் இருவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் மதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments