நெல் கொள்முதலின் போது மூட்டைக்கு ரூ.100 வரை கமிஷன்.. மத்திய அரசு நிர்ணயிக்கும் ஆதார விலையை பின்பற்றவில்லை: அண்ணாமலை

டெல்டாகாரன் என்று தம்மை கூறிக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியில் நெல் கொள்ளுமுதலின் போது மூட்டைக்கு 100 ரூபாய் வரை கமிஷன் பெறப்படுவதாக பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென மழை பெய்தது.
அதில் நனைந்தபடி உரையாற்றிய அண்ணாமலை, நெல்லுக்கும் கரும்புக்கும் மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை தி.மு.க அரசு வழங்குவதில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
மழை காரணமாக நாற்காலிகளை குடை போல பிடித்தபடி நின்று பா.ஜ.க. தொண்டர்கள் அண்ணாமலையின் பேச்சைக் கேட்டனர்.
Comments