"அதிகாரிகளின் நடவடிக்கையால் குவாரி உரிமையாளர்கள் தொழில் செய்ய அஞ்சுகிறார்கள்..." - சி.வி.சண்முகம்..!

உள்ளூரில் தொழில் செய்யும் சிறு குவாரி உரிமையாளர்களை குறிவைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள அதிமுக எம்.பி சி.வி.சண்முகம், வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை ஏன் அரசு தடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமையகத்தில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் தொழில் செய்யும் கல்குவாரி உரிமையாளர்கள் உள்நோக்கத்திடன் பழிவாங்கப்படுவதாகவும், கனிமவளம் கடத்தும் பெரிய அளவிலான நிறுவனங்கள் மீது இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
Comments