நாமக்கல் காவல்நிலைய எஸ்.ஐ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

0 5133

நாமக்கல் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் பூபதிக்கு தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பூபதி, கடந்த 2018-19ம் ஆண்டில் ராசிபுரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த போது, நிலப்பிரச்சனை தொடர்பாக புகாரளிக்க வந்த ஜெயக்குமார் என்பவரிடம் நிலம் தொடர்பாகவும் வேலை வாங்கி தருவதாகவும் கூறியும் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கடந்த 2020ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதனடிப்படையில், தற்போது மோகனூர் திருநகரில் உள்ள பூபதியின் வீடு, மல்லசமுத்திரத்தில் உள்ள பூர்வீக வீடு, அவரது மாமனார் வீடு, தனியார் விடுதி ஆகிய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments