சென்னையில் குற்ற நிகழ்விடங்களை தொடர்ந்து கண்காணிக்க "க்ரைம் மேப்பிங் ஷோன்" எனும் குற்ற வரைபட மண்டல அமைப்பு தொடக்கம்..!

சென்னையில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை இடைவிடாமல் கண்காணிக்கும் "க்ரைம் மேப்பிங் ஷோன்" எனும் குற்ற வரைபட மண்டல அமைப்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில் சென்னை பெருநகரில் எங்கெல்லாம் குற்றச் சம்பவங்கள் அரங்கேறியது என்பதை கணக்கெடுத்து, அதன்படி 60 ஆயிரம் குற்ற நிகழ்விடங்களும், சுமார் 5 ஆயிரம் குற்றவாளிகளின் வசிப்பிடங்களும் பதிவேற்றப்பட்டு "க்ரைம் மேப்பிங் ஷோன்" உருவாக்கப்பட்டுள்ளது.
அதிக குற்றங்கள் நடந்த பகுதி ரெட் ஸ்பாட்டாக குறிக்கப்பட்டு, அந்த இடம் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments