ஆற்றில் கை கழுவ முயன்ற மீனவரை கவ்வி தண்ணீருக்குள் இழுத்த சுறா மீன்..!

0 2248

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், படகிலிருந்த மீனவரை சுறா மீன் ஒன்று கவ்வி தண்ணீருக்குள் இழுத்தது.

எவர்கிளேட்ஸ் தேசிய பூங்கா வழியாகப் பாயும் மிசிசிபி ஆற்றில் முதலைகள், தண்ணீர் பாம்புகள் மட்டுமின்றி உப்புத் தண்ணீரிலும், நன்னீரிலும் வாழக்கூடிய புல் சுறாக்களும் அதிகளவில் காணப்படுகின்றன.

மீனவர் ஒருவர் படகிலிருந்தபடி தூண்டில் வீசிவிட்டு கை கழுவ முயன்றபோது, புல் சுறா ஒன்று பாய்ந்து வந்து அவரது கையை கவ்வி அவரை ஆற்றுக்குள் இழுத்தது.

உடனடியாக சுதாரித்த சக மீனவர்கள் அவரை ஆற்றிலிருந்து மீட்டனர். ஹெலிகாப்டர் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments