உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை வெளியீடு... சென்னையில் 5 போட்டிகள் நடத்தப்படும் என அறிவிப்பு..!

0 2981

50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் 5 போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. தொடரின் முதல் போட்டியும், இறுதி போட்டியும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.

இந்த தொடரின் 5 போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன. அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

அக்டோபர் 14 ஆம் தேதி நியூசிலாந்து - வங்கதேசம் அணிகளும், அக்டோபர் 18 ஆம் தேதி நியூசிலாந்து - ஆப்கன் அணிகளும் மோதுகின்றன. அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் - ஆப்கனிஸ்தான் அணிகளும்,  அக்டோபர் 27 ஆம் தேதி பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments