இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு... முன்னால் சென்ற வாகனத்தை கார் முந்திச் செல்ல முயன்றதால் விபரீதம்...!

கோவையில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற கார் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்தார்.
கோவை கே.ஜி.சாவடி அருகே இந்த விபத்து நேரிட்டது. சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த ஜீப்பை கார் ஒன்று அதிவேகமாக முந்திச் செல்ல முயன்றது.
அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்துடன் அதில் பயணம் செய்த 2 பேர் சுமார் 10 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர்.
தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம் பின்னால் வந்த வேனின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே சொருகிக் கொண்டது. இருசக்கர வாகத்தில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்தார்.
விசாரணையில், இறந்தவர் பெயர் ஜாகிர் உசேன் என்றும், 10-வது படிக்கும் தமது மகன் அஜ்மலை கபடிப் போட்டியில் விடுவதற்காக சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாகவும் போலீசார் தெரிவித்தனர். படுகாயமடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments