உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பரிசு வழங்க கூடாது - கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

0 1274

உயர் நீதிமன்ற நீதிபதிகளை சந்திக்கும் போது, சால்வை, நினைவு பரிசுகள் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் உயர்நீதிமன்ற நீதிபதிகளை வரவேற்பதற்காக புறநகர் பகுதியில் சாலைகளில் காத்திருக்க கூடாது என்றும் பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்ட எந்த சலுகைகளுக்காகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வீடுகளுக்கு செல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளுடன் நேரடியாக எந்த கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ளக் கூடாது, பதிவுத்துறை மூலமாக மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments