2 வாரத்தில் 7 வீடுகளில் கொள்ளை கும்பல் கைவரிசை.. கையில் உருட்டுக்கட்டையோடு தெருக்களில் காவல் காத்த பொதுமக்கள்

மதுரை புறநகர் பகுதியில் முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாகக் கூறி அப்பகுதி மக்களே உருட்டுக்கடைகளுடன் தெருக்களில் இறங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிக்கந்தர் சாவடியை சுற்றிலுள்ள பகுதிகளில் கடந்த 2 வாரத்தில் சுமார் 7 வீடுகளில் கொள்ளை நடந்ததாக கூறப்படுகிறது. உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு டவுசர் அணிந்து உலா வந்த கும்பலின் உருவங்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன.
பொதும்பு ஏ.ஆர். சிட்டி பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த முகமூடி கும்பலை அப்பகுதியினர் பிடிக்க முயன்ற போது வயல்வெளி வழியாக தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, கொள்ளை கும்பலை தேடி இரவு முழுவதிலும் அப்பகுதியினர் கையில் உருட்டு கட்டையோடு விடிய விடிய தூங்காமல் காவலில் ஈடுபட்டனர்.
Comments