செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை முடிந்தது.. உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவர்கள்

சென்னை காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.
காலை 5-15 மணிக்கு டாக்டர் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கினர். 10 மணி வரை அறுவை சிகிச்சை நீடித்தது.
இதன் பின்னர் காவேரி மருத்துவமனை வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் இருந்த 4 அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Comments