கலெக்டர் மேல இந்தாளுக்கு அப்படி என்ன காண்டு.? கன்னத்தில் அடிக்க சொல்றாரு.... ரூ10 லட்சம் பணமும் வேணுமாம்..!

0 2269

திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் கோவிலுக்கு மின் இணைப்பு வேண்டுமானால், கலெக்டரின் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைந்து கையெழுத்து வாங்கி வாருங்கள் மின் இணைப்புத்தருகிறேன் என்று கூறி மின்வாரிய இளநிலை பொறியாளர் ஒருவர் மக்களை அலைக்கழித்த வீடியோ வெளியாகி உள்ளது.

இந்தாளுக்கு கலக்டர் மேல் என்ன காண்டோ தெரியவில்லை.. அவரை சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து கெயெழுத்து வாங்கி வரச்சொல்லும் இவர் தான் மாதம் ரூ 10 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக கூறும் இளநிலை மின்வாரிய பொறியாளர் ஸ்ரீதர்..!

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கல்லக்குடி மின்நிலையத்தின் பணியாற்றி வரும் இளநிலை பொறியாளர் ஸ்ரீதரிடம் கல்லக்குடி புதிய சமத்துவபுரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு அப்பகுதிமக்கள் மின் இணைப்பு வேண்டி கேட்டுள்ளனர்.

மின் இணைப்பு கொடுக்காமல் இழுத்தடித்த நிலையில், இப்போது எல்லாம் ஆன்லைனில் உள்ளது என்று கூறிய ஸ்ரீதரிடம் , நீங்கள் மனசு வச்சா கோவிலுக்கு மின் இணைப்பு கொடுக்கலாம் என்று கோவில் நிர்வாகி ஒருவர் பணிவுடன் கோரிக்கை வைக்க, எகத்தாளமாக பேசிய ஸ்ரீதர், கலெக்டர் ஆபீஸ் சென்று சட்டையை பிடித்து கலெக்டர் கன்னத்தில் அரைந்து அவனிடம் கையெழுத்து வாங்கிட்டு வா மின் இணைப்பு தருகிறேன் என தரைகுறைவாக பேசினார்

கோயிலுக்கு தானே புண்ணியமா போகும் மின் இணைப்பு கொடுங்கள் என்று கேட்டதற்கு கலெக்டர் சட்டை பிடித்துக் கேளுங்கள் என்றும் கலெக்டர் சட்டையை பிடித்து எழுதி வாங்கி வாருங்கள் நான் அடுத்த நொடியே மின் இணைப்பு தருகிறேன் என்றும் கூறிய ஸ்ரீதர் ,நீங்கள் வாங்கி வந்தால் உங்கள் கோயிலுக்கு நான் பணம் கட்டுகிறேன் என்றும், வருமானம் முழுவதும் அவனிடம் தான் உள்ளது எனவும் கூறினார்

இறுதியில் கோயிலின் பேரில் தடையில்லா சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று தாசில்தாரிடம் கடிதம் வாங்கி வாருங்கள், நான் மின் இணைப்புத் தருகிறேன் என்ற ஸ்ரீதர், நீங்கள் சொல்லுவதை எழுதிக் கொடுக்க வேண்டும் என்றால் இந்த மாதம் எனக்கு சம்பளம் 10 லட்சம் ரூபாய் தருகிறீர்களா என்று பகிரங்கமாக கையூட்டு கேட்டதாக கோவில் நிர்வாகி வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments