விசா பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி உடன் விவாதிக்கப்படும் - அமெரிக்க வெளியுறவுத்துறை

0 1708

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை எதிர்கொள்ளும் விசா பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி உடன் விவாதிக்கப்படும் என்று அமெரிக்க  வெளியுறவுத்துறை செயலாளர் மாத்திவ் மில்லர் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காரணமாக விசா வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டதாக கூறினார். தற்போது இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், விசா வேண்டி விண்ணப்பத்தவர்களுக்கு காத்திருப்பை தவிர்த்து உடனடியாக நேர்காணல் வழங்கி, பயணத்திற்கு உதவி செய்வதாக குறிப்பிட்டார்.

நாளை மறுநாள் அமெரிக்கா வரும் மோடி உடன் விசா பிரச்சனை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாட்டு உறவு மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாத்திவ் மில்லர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments