சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக விமான சேவைகள் பாதிப்பு..!

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மயிலாப்பூர், ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
தியாகராய நகர், ஜெமினி மேம்பாலம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
சில சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் சூழ்ந்த நிலையில், மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கனமழையின் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. துபாய், அபுதாபி, லண்டன் நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 10 விமானங்கள் தரையிறங்க முடியாததால் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன.
சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான் உட்பட 9 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் 3 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக புறப்பட்டன.
Comments