நேபாளத்தில் மழை பாதிப்புகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!

நேபாளத்தில் மழை பாதிப்புகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், மாயமான 20க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த வாரம் பருவமழை தொடங்கியது. கனமழையால் இந்திய எல்லையை ஒட்டியுள்ள தப்லேஜங், பஞ்ச்தார் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனிடையே, சங்குவாசபா மாவட்டத்தில் ஹேவா ஆற்றின் மேல் கட்டப்பட்டு வந்த நீர்மின் நிலையம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் மாயமாகினர். சேறு சகதிகளுக்கு மத்தியில் மாயமான தொழிலாளர்களை தேடும் பணி தொடருகிறது.
Comments