தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடல் -அமைச்சர்

0 3578

தமிழ்நாட்டில் 500 மதுபானக்கடைகள் விரைவில் மூடப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, மூடப்பட உள்ள 500 மதுக்கடைகள் எவை என்ற பட்டியலை இறுதி செய்யும் பணிகள் கடைசி கட்டத்தில் உள்ளதாக கூறினார்.

தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments