பூமிக்குத் திரும்பிய 'ஷென்ஜோ-15'.. 20 கிலோ மாதிரிகளை பூமிக்கு எடுத்துவந்த விண்வெளி வீரர்கள்..!

0 4373

6 மாத விண்வெளி பயணத்தை நிறைவு செய்துவிட்டு பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள், 20 கிலோ எடையுள்ள ஆராய்ச்சி மாதிரிகளை கொண்டுவந்துள்ளனர்.

பெண்ணின் கரு முட்டை செல்கள், நுண்ணுயிர்கள், புல், நெற்பயிர்கள் போன்றவை விண்கலம் மூலம் டியாங்காங் ஆராய்ச்சி மையத்திற்கு 6 மாதங்களுக்கு முன் ஷென்ஜோ - 15 என்ற விண்கலம் மூலம் விஞ்ஞானிகள் அனுப்பி வைத்தனர். விண்வெளியில், புவியீர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாறுபட்ட சூழலில் இருக்கும் போது அவற்றின் பண்புகளில் நேரும் மாற்றங்கள் குறித்து கடந்த 6 மாதங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வு மாதிரிகளை தற்போது பூமிக்கு கொண்டுவந்த ஷென்ஜோ - 15 விண்வெளி வீரர்கள் அவற்றை சம்பந்தப்பட்ட துறைகளின் விஞ்ஞானிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments