ரயில் விபத்து பற்றி வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஒடிசா போலீசார்

ரயில் விபத்துக்கு மதச்சாயம் பூசுவோர் மீதும் வதந்திகளைப் பரப்புவோர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒடிசா போலீசார் எச்சரித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் ரயில் விபத்து குறித்த பல்வேறு தவறான தகவல்களும் உள்நோக்கம் கொண்ட பதிவுகளும் வெளியாகி வருகின்றன. சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் இவற்றைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒடிசா காவல் துறை விடுத்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Comments