அப்படியே வாழ்த்திட்டாலும்... முதல்ல ஒழுங்கா படிப்போம், அப்புறமா பேனர் அடிப்போம்... பந்திக்கு.. பந்து..! கடலைக்கு.. கல்லை..!

0 3113

வித்தியாசமாக சிந்திப்பதாக நினைத்து , தப்பும் தவறுமான வாசகத்துடன் வைக்கப்பட்ட திருமண பேணர் இது தான்..!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மாணம்பாடி கிராமத்தை சேர்ந்த கதிரவன் என்பவருக்கும் ஆலம்பாடி சிக்கல் பகுதியை சேர்ந்த ஜானு என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்காக பெண்ணின் உறவுக்கார இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி தினசரி நாளிதழ் வடிவில் திருமண பேனரை அச்சிட்டு சாலையோரம் வைத்தனர். இந்த பேனர் மிகுந்த பிழைகளுடன் அச்சடிக்கப்பட்டிருந்ததால் மக்களை கவர்வதற்கு பதிலாக கேலிக்குள்ளாகி உள்ளது.

அந்தவகையில் ஜானுவின் மனதை திருடியதற்காக... என்பதற்கு பதிலாக சாமுவின் மனதை திருடியதற்காக .. என்றும் மண நாள் ஜூன் 2 என்பதற்கு பதிலாக ஜீன் -2 என்றும், காதலித்த என்பதில் காதளித்த என்று வருடல் ளகரத்தை பயன்படுத்தி உள்ளனர்.

கல்யாண பந்தியில் கலவரம் என்பதற்கு பதிலாக பந்தில் கலவரம் என்றும், கையும் களவுமாக என்பதற்கு கையும் கலவுமாக என்று ல என்ற ஒற்றல் லகரத்தை போட்டு அர்த்தத்தையே மாற்றி உள்ளனர்.

கடலை, வடை என்பதற்கு பதிலாக கல்ல வடை என்றும், அதில் ஒரு கடலையை காணவில்லை என்பதற்கு பதிலாக கல்லை காணவில்லை என்றும் மூன்று என்பதை முன்று என்றும் ஏகத்திற்கும் தப்பும் தவறுமாக அச்சிடப்பட்டுள்ளது இந்த பேனர் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்

நியாயம் என்பதற்கு நாயம் என்றும், கார்ல் மார்க்ஸ் என்பதற்கு பதிலாக மார்ஸ் என்று பெயரே தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள இளைஞர்களில் ஒருவராவது பேனரில் எழுதப்பட்டுள்ள வாசகங்களை படித்து பார்த்தார்களா ? என்ற கேள்வி எழுகின்றது

அடுத்த மாப்பிள்ளை நாங்க, பொண்ணு இருந்தா தாங்க.. என்று பஞ்சடிக்க நினைத்து அடுத்த மாப்பிள்ளை நாங்க பொண்ணு இருந்ததாங்க என்று கேட்டு கலகலப்பூட்டி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments