இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மீது கார் மோதியதால் பரபரப்பு.... அதிவேகமாக வாகனம் ஓட்டிய இளைஞரை கைதுசெய்து விசாரணை...!

0 1251

இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தின் நுழைவு வாயில் மீது கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று, லண்டன் நகரிலுள்ள டவுனிங் தெருவில் அதிவேகமாக வந்த கார், பிரதமர் ரிஷி சுனாக் தன் குடும்பத்தினருடன் வசித்துவரும் ஒயிட் ஹால் நுழைவு வாயிலின் முதலாவது கேட் மீது மோதியது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக காரை சுற்றிவளைத்தனர்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென உறுதிசெய்துள்ள அதிகாரிகள், பிரதமர் இல்லம் மீது வாகனத்தை மோதவிட்டு குற்றமிழைக்கும் வகையில் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் ஆபத்தாக வாகனம் ஓட்டியதாக, இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments