ரயில் விபத்தில் இரு கால்கள் மற்றும் ஒரு கையை இழந்த இளைஞர் UPSC வெற்றி பெற்று அசத்தல்

0 2015

உத்தரப்பிரதேசத்தில் இரு கால்களையும் இழந்த இளைஞர் ஒருவர் மத்திய பணியாளர் தேர்வாணையத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் திவாரி என்பவர் 2017ம் ஆண்டு ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் இரு கால்கள் மற்றும் ஒரு கையை இழந்தார்.

மற்றொரு கையில் இரு விரல்களும் துண்டிக்கப்பட்டன. இருப்பினும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழியில் முதுகலைப் பட்டத்தை வென்றார் சூரஜ்.

இந்நிலையில் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஊக்கத்தினால் மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வை எழுதினார். இதில் முதல் முயற்சியிலேயே 917 வது இடம் பிடித்து சூரஜ் திவாரி வெற்றி பெற்றுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments