இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னணி தொழில்நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
3 நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, மெல்பேர்னில் ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பால் ஸ்ரோடரை சந்தித்து பேசினார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னணி பசுமை எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான Fortescue Future Industries நிறுவன நிர்வாகத் தலைவர் ஜான் ஆன்ட்ரு ஹென்ரி பாரஸ்ட், ஹேன்காக் பிராஸ்பெக்டிங் நிறுவன நிர்வாக தலைவர் ஜினா ரைன்ஹார்ட் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புகளின்போது, பொருளாதார வளமிக்க நாடுகள் முதலீடு செய்யத் தழுந்த இடங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும், எனவே இந்தியாவில் முதலீடு செய்ய வரும்படியும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Comments