ரஷ்யாவுக்கு இந்தியா ஆயுதங்கள் அனுப்பியதற்கான ஆதாரம் இல்லை.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேட்டி!

0 1767

உக்ரைனின் பக்முத் நகரத்தை ரஷ்யா கைப்பற்றி விட்டதாக கூறப்படும் நிலையில், அந்த நகரம் ஆக்கிரமிக்கப்படவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், உக்ரைன் ராணுவத்தினரின் ரகசியத் தகவல்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது என்றார்.

நிலைமை கடினமாக இருப்பதாகவும், பொதுமக்கள் சுற்றி வளைக்கப்பட்டால் கடினமான சூழ்நிலை ஏற்படும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மேலும் பக்முத் நகரின் அழிவுகள் ஹிரோஷிமாவை நினைவூட்டுதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஜெலன்ஸ்கி, இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பியதற்கான ஆதாரம் இல்லை எனவும் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments