தஞ்சையில் மது அருந்தி இருவர் உயிரிழந்த விவகாரம்.. மதுவில் சயனைடு.. கொலையா? தற்கொலையா? என போலீஸ் தீவிர விசாரணை

0 1115

தஞ்சையில், மது அருந்தி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், உடற்கூறாய்வில் சயனைடு விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  உயிரிழப்புக்கு காரணமான மதுபானத்தை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியதில் சயனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார். மேலும், இந்த சம்பவத்தில்  தொடர்புடையவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments