தமிழக உள்மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவக்கூடும்...!

0 1083

தமிழக உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த அதிக வெப்பநிலையால் ஏற்படும் வெப்ப அழுத்தம் காரணமாக, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில், வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், நீலகிரி, கோவை, தேனி, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments