2 அடி நீளமுள்ள தங்க வேலை காணிக்கை செலுத்திய சீமான்..!

நாம் தமிழர் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 2 அடி நீளமுள்ள தங்க வேலை சீமான் காணிக்கையாக செலுத்தினார்.
இதையொட்டி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலில் அவர் வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நகையை அடகு வைத்து கல்வி பயிலும் சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.
ஆனால் விஷச் சாராயம் குடித்தவர்களுக்கு அரசு 10 லட்சம் நிதி தருவதாக அவர் விமர்சித்தார்.
Comments