39 ஊழியர்களுடன் கடலில் மூழ்கிய மீன்பிடி கப்பல்.. சீனாவின் வேண்டுகோளை ஏற்று தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படை..!

0 2714

இந்தியப் பெருங்கடலில் 39 ஊழியர்களுடன் மூழ்கிய தங்கள் நாட்டு மீன்பிடி கப்பலை தேடும் பணியில் உதவ வேண்டுமென சீனா விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்திய விமானப்படை விமானம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் நடுக்கடலில் அந்த படகு மூழ்கியிருக்கலாம் எனத் தெரிவித்த சீனா, மீட்புப் பணிக்கு உதவ அண்டை நாடுகளை கேட்டுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, பி 8 ஐ என்ற விமானத்தை தேடுதல் பணியில் ஈடுபடுத்திய இந்திய விமானப்படை, மோசமான வானிலைக்கு இடையிலும் கப்பலின் பல பாகங்களை கண்டறிந்துள்ளது.

கப்பலில் சீனா, இந்தோனேசியாவைச் சேர்ந்த தலா 17 பேரும், பிலிப்பைன்சை சேர்ந்த 5 பேரும் இருந்த நிலையில் 2 சடலங்களை ஆஸ்திரேலிய குழுவினர் மீட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments