நில அளவை மதிப்பீடு செய்ய சென்ற வங்கி மேலாளர், ஊழியர்கள் மீது தாக்குதல்..!

0 1685

காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள இடத்திற்கு வங்கி கடன் வழங்குவதற்காக நில அளவை மேற்கொள்ள சென்ற வங்கி ஊழியர்களை தாக்கி தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செந்தில்குமார் என்பவர், ராயன்பாளையத்தில் உள்ள தனது காலிமனையின் பெயரில் கடன் கேட்டு நாகூர் சிட்டி யூனியன் வங்கி கிளையில் விண்ணப்பித்திருந்தார்.

காலிமனை தொடர்பாக நாகப்பட்டினத்தை சேர்நத காளியப்பன் என்பவருடன் பிரச்னை இருந்த நிலையில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

வழக்குப் பற்றி அறியாத வங்கி மேலாளர் விஜய் சக்கரவர்த்தி, ஊழியர்கள் சதீஷ், அரவிந்த் ஆகியோருடன் செவ்வாய்கிழமை அன்று அந்த இடத்தை மதிப்பீடு செய்ய சென்றுள்ளார்.

அப்போது காளியப்பனின் உறவினர் பிரகாஷ் என்பவர் அவர்களை தரக்குறைவாக பேசியதோடு, கட்டையால் தாக்கியதில் காயமடைந்த மூவரும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments