"கடமை உணர்வோடு காவல்துறை செயல்படவில்லை என்றால் அரசுக்கு அவப்பெயர்.." - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன்..!

தமிழக காவல்துறை கடமை உணர்வோடும், சுறுசுறுப்புடனும் செயல்படவில்லை என்றால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில், கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு மொத்த காவல்துறையையும் தூய்மைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக கூறியுள்ளார்.
பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்வதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடம் மாறுதல் செய்யப்படுவதும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்தாலும் தவறுகளும் தொடர்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments