வெற்றிக்கு வெடித்த வெடியால் கிழிந்தது தொண்டரின் சட்டை..! வலியை மறைத்த மகிழ்ச்சி..!

0 1742

சென்னை சத்திய மூர்த்தி பவன் வாசலில் நடந்த வெற்றிக்கொண்டாட்டத்தின் போது நாட்டு பட்டாசு வெடித்து தொண்டரின் சட்டை கிழிந்ததோடு கையில் காயமும் ஏற்பட்டது. பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட காயத்தை நாட்டு வெடிகுண்டு பட்டு காயம் அடைந்ததாக அவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தை நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள காங்கிரசாரும் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக உற்சாக மிகுதியால் கையில் வைத்து பட்டாசு வெடித்த தொண்டர் அதனை கீழே வைத்தப்பின் உற்றுப்பார்த்தார். இதனால் பட்டாசு அவரது முகத்தில் பட்டு முகம் கருகியது

மேலும் வானை நோக்கிச்செல்லக்கூடிய பட்டாசுகள், கொத்தாக சாய்ந்து கூட்டத்தை நோக்கி பாய்ந்ததால் கூடியிருந்த தொண்டர்கள் கலைந்து ஓடும் நிலை ஏற்பட்டது

இதே போல சென்னையில் சத்திய மூர்த்தி பவனுக்கு வெளியே நடந்த வெற்றிக் கொண்டாத்தின் போது ஒரு கோஷ்டி தொண்டர்கள் சாலையில் 10 ஆயிரம் வாலா பட்டாசை பற்ற வைக்க முயற்சித்துக் கொண்டிருக்க , மற்றொரு கோஷ்டி நாட்டு பட்டாசை பற்றவைத்ததால், வாலாவை கீழே போட்டு விட்டு நாலா பக்கமும் தொண்டர்கள் ஓடினர்.

அந்த நாட்டு பட்டாசு வெடித்ததில் குமரியை சேர்ந்த ஜஸ்டின் என்ற தொண்டருக்கு வலது கையில் சட்டை கிழிந்து காயம் ஏற்பட்டது. தொண்டர்கள் நாட்டு வெடிகுண்டு வெடித்து கொண்டாடியதால் தனது கையில் காயம் பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அவர், கர்நாடக தேர்தல் வெற்றியின் மகிழ்ச்சியால் கையில் உள்ள காயத்தின் வலி பெரிதாக தெரியவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments