பொம்மை கார் வாங்குவதற்காக தனது தம்பியுடன் பெரிய காரில் சென்ற 6 வயது சிறுவன், மின்கம்பத்தில் மோதி விபத்து..!

0 2794

மலேசியாவில் பொம்மை கார் வாங்குவதற்காக தனது 3 வயது தம்பியுடன் வீட்டிலிருந்த பெரியவர்கள் பயன்படுத்தும் காரை 6 வயது சிறுவன் ஓட்டிச் சென்றுள்ளான்.

லங்காவி பகுதியைச் சேர்ந்த அந்த சிறுவர்கள் இருவரும் வீட்டில் தாய்-தந்தை அசந்திருந்த நேரத்தில் காரை எடுத்துக் கொண்டு சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றுள்ளனர். பின்னர், கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

யாராவது மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியிருப்பார்கள் என நினைத்த சக ஓட்டுநர்கள், காருக்குள் எட்டிப்பார்த்த போது 2 சிறுவர்கள் இருப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சிறுவர்களை மீட்ட பிறகே குழந்தைகளும், காரும் காணாமல் போனது பெற்றோருக்கு தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments