கர்நாடகாவில் 224 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடக்கம்..!
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
224 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில், ஜெயநகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார்.
முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஹாவேரி மாவட்டம் ஷிகோனில் உள்ள வாக்குச்சாவடியில், மக்களோடு வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
வாக்களித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் எனத் தெரிவித்தார்.
Comments