உள்நாட்டு ராணுவ பெண் அதிகாரிகளுக்கு எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பணி..!

0 1278

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் உள்நாட்டு ராணுவத்தின் பெண் அதிகாரிகளை பணியமர்த்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

உள்நாட்டு ராணுவத்தில் 2019-ம் ஆண்டு முதல் பெண் அதிகாரிகள், சுற்றுச்சூழல் பணிக்குழு, எண்ணெய்த்துறை மற்றும் ரயில்வே பொறியியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர்.

இந்தக் காலகட்டத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், உள்நாட்டு ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு மேலும் வேலை வாய்ப்பை நீட்டிக்கும் முடிவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, உள்நாட்டு ராணுவத்தின் பெண் அதிகாரிகள் இனி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பணிபுரியும் பொறியியல் பிரிவிலும் டெல்லியில் உள்ள உள்நாட்டு ராணுவ  தலைமையகத்திலும் தேவைகளுக்கேற்ப பணியமர்த்தப்படுவார்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments