அதிவேகமாக திரும்பிய பேருந்தில் இருந்து சாலையில் விழுந்த இளம்பெண் பரிதாபமாக பலி..!
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே சாலை வளைவில் அதிவேகமாக திரும்பிய தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெண்ணந்தூரைச் சேர்ந்த கௌசல்யா பாலிகாடு பகுதியில் தனியார் கார்மெண்ட்ஸில் வேலைசெய்து வரும் நிலையில், புதன்கிழமை அன்று வேலைக்கு சென்று விட்டு எஸ்.கே.டி. தனியார் பேருந்தில் வீடு திரும்பியுள்ளார்.
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், படிக்கட்டுக்கு அருகே கௌசல்யா நின்றிருந்த நிலையில், சந்திரா திரையரங்கம் அருகே சாலை வளைவில் பேருந்து அதிவேகமாக திரும்பியபோது, தவறி விழுந்துள்ளார்.
கௌசல்யா விழுந்த இடத்தில் ஜல்லிக்கற்கள் அதிகம் இருந்ததால், தலையில் பலத்த காயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
அதிவேகம் மற்றும் அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கியதாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேக கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளதா உள்ளிட்ட சோதனைக்காக பேருந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments