தமிழ்நாடு, கர்நாடகாவில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கடப்பாரை கொள்ளைக் கும்பலின் தலைவன் கைது..!

தமிழ்நாடு, கர்நாடகாவில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கடப்பாரை கொள்ளைக் கும்பலின் தலைவனை திருவாரூர் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சையைச் சேர்ந்த செல்வம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கடப்பாரை மூலம் கதவை உடைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளான்.
அந்த வகையில், கடந்த 24ம் தேதி மன்னார்குடியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் இக்கும்பல் கைவரிசையைக் காட்டியது. சம்பவத்தன்று செல்வமும் அவனது கூட்டாளிகளும் துண்டால் முகத்தை மூடிக் கொண்டு கைலி அணிந்து மேலாடை இன்றி, அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், மீண்டும் திருடுவதற்காக நோட்டமிட குட்டி யானை வாகனத்தில் சென்ற கொள்ளையன் செல்வம், மன்னார்குடி அருகே "ஒரத்தநாடு தனிப்பிரிவு சாலை" பகுதியில் வாகன தணிக்கையின் போது போலீசில் சிக்கினான். அவனை கைது செய்த போலீசார், அவனது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
Comments