தங்கலான் விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்தது.. படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்..!

0 4645

தங்கலான் படப்பிடிப்பின் போது நடிகர் விக்ரமுக்கு விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..

பொன்னியின் செல்வன் தந்த வெற்றியின் உற்சாக மிகுதியில் நடிகர் விக்ரம், தங்கலான் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கர்நாடகாவின் தங்கவயல் பகுதியில் விறு விறுப்பாக நடந்து வந்தது தங்கலான் படப்பிடிப்பு

இந்த படத்திற்காக விக்ரம் உடல் மெலிந்தாலும், கட்டுடல் உடன் ரசிகர்களுக்கு உற்சாக விருந்து படைக்கும் வகையில் ஆக் ஷன் காட்சிகளில் நடித்து வந்தார்

படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான மேக்கிங் வீடியோவை வெளியிட்டு தங்கலான் குழுவினர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்ட நிலையில், யார் கண் பட்டதோ நடிகர் விக்ரம் விபத்தில் சிக்கி விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது

தங்கலான் படத்தின் சண்டைக் காட்சி ஒத்திகையின் போது விக்ரமுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள படக்குழு படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது. இதனை விக்ரமின் மேலாளர் டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார்

சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய விக்ரம் அதன் பின்னர் உற்சாகமாக பொன்னியின் செல்வன் புரமோஷன் மற்றும் தங்கலான் படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் ரசிகர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments