புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் போலீஸ்காரர் உட்பட 2 பேர் உயிரிழப்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் போலீஸ்காரர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
கல்லூர் என்ற கிராமத்தில் அரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதில், பார்வையாளர் பகுதியில் இருந்த சுப்பிரமணிமனியன் என்பவர் காளை முட்டி படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
போட்டியில் காயமடைந்த மற்றொரு நபரை மீட்க முயன்ற மீமிசல் காவல்நிலைய முதல்நிலை காவலர் நவநீதகிருஷ்ணனை வயிற்றில் காளை முட்டியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மஞ்சுவிரட்டில் 63 பேர் காயமடைந்தனர். இதையடுத்து மஞ்சுவிரட்டு பாதியிலே நிறுத்தப்பட்டது.
Comments