முக்கிய நகரங்களில் தினசரி சைபர் குற்றம் மூலமாக 3 கோடி ரூபாய் வரை வங்கிப்பணம் மோசடி.. 5 பேர் கைது!

0 1229

மும்பை டெல்லி ஹைதராபாத் பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களில் தினசரி சைபர் குற்றம் மூலமாக 3 கோடி ரூபாய் வரை வங்கிப்பணத்தை மோசடி செய்த ஸ்ரீநிவாஸ் ராவ் என்பவரை விசாகப்பட்டினத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் போனில் பேச பெண்களை நியமித்து பல்வேறு நபர்களைக் குறிவைத்து மும்பை போலீசாரைப் போல பேசி மிரட்டுவார்கள்,நீங்கள் அனுப்பிய போதைப் பொருள் பார்சல் எங்களிடம் சிக்கியுள்ளது என்று பயமுறுத்தி, ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்யும்படி கூறுவார்கள்.

அப்படி ஆப் பதிவிறக்கம் செய்யும் நபர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று பணத்தை அபகரித்துவிடுவார்கள்.

இப்படி தினமும் 3 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை இந்த கும்பல் மோசடி செய்து வந்துள்ளது.அந்தப் பணம் கிறிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டு சீனாவுக்குஅனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments