கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் பற்றாக்குறையால் 3 மணி நேரம் காத்திருந்த பயணிகள்..!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கி உள்ளதாலும், நாளை விடுமுறைநாள் என்பதாலும் சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
பேருந்துகள் பற்றாக்குறையால் பெரம்பலூர், விருத்தாசலம், நெய்வேலி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் 3 மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments