''தங்களது போராட்டத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம்..'' - மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை..!

தங்களது போராட்டத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளத்தினத் தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ள வீராங்கனைகள், அவரைக் கைது செய்யும்படி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், தங்களின் போராட்டத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
Comments