500 பெண்களை ஏமாற்றிய திமுக பிரமுகர் - மனைவி ஓட்டம்... வீட்டை காலி செய்ய விடாமல் தடுத்தனர்... பணத்துடன் தலைமறைவானதால் தவிப்பு..!
சென்னையில் தொழில் வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி பணத்துடன், திமுக பிரமுகர் மற்றும் அவரது மனைவி தலைமறைவான நிலையில் வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க வந்த வழக்கறிஞர் மற்றும் ஊழியர்களை பிடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரின் மகன் மகாதேவ பிரசாத் இவரது மனைவி ஜெயஸ்ரீ. மகாதேவ பிரசாத் திமுக இளைஞர் அணியின் மாவட்ட நிர்வாகியாக இருந்ததாக கூறப்படுகின்றது. சென்னையில் பல்வேறு இடங்களில் இல்லத் தரசிகளிடம் அரசு மூலம் சிறு தொழில் செய்ய வாய்ப்பளிப்பதாக கூறி 500க்கும் அதிகமான பெண்களிடம் தலா 25 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வசூலித்துள்ளர்.
மேலும் உணவு தானியங்கள் மற்றும் மளிகைப்பொருட்களை கொடுத்து சிறு சிறு பாக்கெட் செய்து தரும் படியும், அவற்றுக்கு மாத ஊதியமாக 3 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை தருவதாகவும் கூறி, வேலை வாங்கி உள்ளார் மகாதேவ பிரசாத். கடந்த சில மாதங்களாக பணி செய்த பெண்களுக்கு மாத ஊதியம் தராமலும், கொடுத்த முன்பணம் ரூபாய் 25000 த்தை சுருட்டிக்கொண்டும் மகாதேவ பிரசாத்தும், அவரது மனைவியும் குடும்பத்தினரோடு தலைமறைவானதாக கூறப்படுகின்றது.
இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையம் தொடங்கி காவல் ஆணையர் அலுவலகம், தலைமை செயலகம் வரை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மகாதேவ பிரசாத் வீட்டில் இருந்த பொருட்களை சிலர் லாரி மூலமாக ஏற்றிக் கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. வீட்டை காலி செய்யும் பணியினை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள், வீட்டில் இருந்த பொருட்களை ஏற்றிய வழக்கறிஞரையும், மூன்று ஊழியர்களையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வீடு காலி செய்யும் தகவல் ஏமாந்த பொதுமக்கள் மேலும் சிலருக்கு தெரிய வரவே அரும்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இந்த வழக்கு தொடர்பாக மத்தியக்குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடைப்பெற்று வருவதாகவும், காவல் ஆணையர் அலுவலகம் செல்லுமாறு போலீசார் அறுவுறுத்தியதின் பேரில் அனைவரும் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றனர்
தலைமறைவான தம்பதியின் இருப்பிடம் குறித்து வழக்கறிஞரிடம் விசாரணை மேற்கொள்வதாக அரும்பாக்கம் போலீசார் தெரிவித்தனர். இந்த மோசடியில் ஈடுபட்ட மகாதேவ பிரசாத்தின் 70 வயது தாயைத்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்மக்கும்பல் வீட்டுக்குள் புகுந்து கட்டிபோட்டு சிதரவதை செய்தது குறிப்பிடதக்கது.
Comments