சென்னை விமானநிலைய பார்க்கிங் பகுதியில் போதிய பணியாளர்கள் இல்லாததால் வாகனங்கள் நிறுத்துவதில் அவதி..!

சென்னை விமான நிலைய வாகன நிறுத்தம் இடத்தில் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குள்ள அடுக்கு மாடி மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதியில் கார்களை ஒழுங்கு படுத்தும் பகுதியில் போதிய பணியாளர்கள் இல்லாததால் தினந்தோறும் வாகனத்தை நிறுத்துவதில் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் அங்கிருந்து வாகனத்தை வெளியே எடுப்பதற்கு வெகு நேரம் ஆவதால் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லும் பொழுது கூடுதல் நேரக் கட்டணம் வசூலிப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
Comments