சித்தியின் கொடுமை தாங்காமல் மோட்டார் அறையில் தஞ்சமடைந்த 9 வயது சிறுமி ?

0 2545

சென்னை, நொளம்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் மோட்டார் அறையில் இருந்து மீட்கப்பட்ட 9 வயது சிறுமி சித்தியின் கொடுமை தாங்காமல் அங்கு தஞ்சமடைந்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகப்பேர் மேற்கு பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்பவர் கருத்துவேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்து, இரண்டாவதாக கீர்த்தனா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் முதல் மனைவிக்கு பிறந்த மகளும் ரமேஷுடன் இருக்கிறார்.

கடந்த நான்கு மாதங்களாக, சிறுமி பொய் பேசுவதாக கூறி, அப்பா மற்றும் சித்தி அடித்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி அதேப் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் மோட்டார் அறையில் தஞ்சமடைந்து, சுமார் 3 மணி நேரமாக அங்கேயே இருந்துள்ளார். அங்குள்ள ஒருவர் காவல் துறையின் 100 என்ற அவசர எண்ணுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதே சமயத்தில் குழந்தையின் தந்தை ரமேஷ் தனது குழந்தை காணவில்லை என காவல் நிலையத்திற்கு புகைப்படத்துடன் புகார் அளிக்க வந்துள்ளார்.சிறுமியின் அங்க அடையாளங்கள் புகைப்படத்துடன் ஒத்து போக ரமேஷை போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments