12 மணிநேர வேலை சட்டவரைவை தொழிற்சங்கங்கள் அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும்: ஈஸ்வரன் எம்.எல்.ஏ

0 2222

12 மணி நேர வேலைநேரம் குறித்த சட்டவரைவை தொழிற்சங்கங்கள் முழுமையாக புரிந்துக் கொண்டு அரசுக்கு ஆதரவளிக்க வேண்டுமென எம்எல்ஏ ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரான ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தால் தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது.

வாரத்திற்கு 4 நாட்கள் வேலை பார்த்துவிட்டு மீதி 3 நாட்கள் சம்பளத்தோடு விடுமுறை பெற்றுக் கொள்ள சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மற்ற மாநிலங்கள் அமல்படுத்தி விட்டால், அங்கு தொழிற்சாலைகள் சென்று விடும் என்பதால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும்.

ராஜஸ்தான், மேற்குவங்க மாநிலங்கள் சட்ட வரைவுகளுக்கு  ஒப்புதல் அளித்துள்ளன. எனவே, இச்சட்டத்தை 1 வருடம் செயல்படுத்தி சாதக பாதகங்களை பார்க்கலாமென அறிக்கையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments