12 மணி நேர வேலையை அனுமதிக்கும் மசோதாவிற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு..!

சுவிட்ச் போட்டால், ஓடும் இயந்திரம் போல் அல்ல மனித வாழ்க்கை, 8 மணி நேரமாக வேலை நேரம் இருந்தால் தான் ஊழியர்களால் பணியாற்ற முடியும் என 12 மணி நேர வேலை நேர மசோதா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் வலியுறுத்துவோம் என்றும் கூறினார்.
தேர்தல் ஆணையம் முடிவை அறிவித்த பிறகும் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்துவதாகவும், அது குறித்து கட்சி தலைமை குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments