சிறுமிகளை குறிவைத்து, காதல் வலையில் வீழ்த்தி பாலியல் தேவை முடிந்ததும் கழற்றி விடும் காமுகன்.. தீவிரமாக தேடி வரும் போலீசார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பதின் வயது சிறுமிகளை குறிவைத்து, காதல் வலையில் வீழ்த்தி பாலியல் தேவை முடிந்ததும் கழற்றி விடும் இளைஞன் ஒருவன் தனது 24 வயதில் 2வது போக்சோ வழக்கில் சிக்கி, போலீசாரால் தேடப்பட்டு வருகிறான்.
பார்வதிபுரத்தைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் என்ற அந்த இளைஞன், கட்டுமான பணிக்கு 'சித்தாள்' வேலை செய்து வருகிறான். சமூக வலைதளங்களில் விதவிதமான கெட்டப்புகளில் புகைப்படங்களை பதிவேற்றுவது விக்கியின் வழக்கம்.
சிறுமிகளை குறி வைத்து தன் வலையில் வீழ்த்தி காதலிப்பது போல் நடித்து கடத்திச் செல்லும் அவன், இரண்டு நாட்கள் முதல் நான்கு நாட்கள் வரை அவர்களை தன் தேவைக்குப் பயன்படுத்திவிட்டு அப்படியே கழற்றி விடுவான் என்று கூறப்படுகிறது. காணாமல் போகும் பிள்ளைகள் திரும்ப கிடைத்தால் போதும் என்று எண்ணும் சிறுமிகளின் பெற்றோர், விக்கி மீது புகார் கொடுக்காமல் தவிர்த்து வந்துள்ளனர்.
இருந்தும் கடந்த 2020ஆம் ஆண்டில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக விக்கி மீது ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியை காதலிப்பது போல் நடித்து கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விக்கி மீது இரண்டாவது போக்சோ வழக்கை பதிவு செய்து, போலீசார் தேடி வருகின்றனர்.
Comments