விசாரணைக்கு வந்தவர்கள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி அதிகாரி உலகராணி விசாரணையை தொடங்கினார்

0 1030

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கபட்ட விவகாரம் குறித்த விசாரணை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டதால், அதன் விசாரணை அதிகாரியான உலகராணி கோப்புகளைப் பெற்றுகொண்டார்.

சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜகுமார் நவராஜ், இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடயவியல் துறை, கைரேகை நிபுணர்கள் என  சுமார் 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து இங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள், ஆய்வாளர் அறை, காவல் நிலையத்தின் வெளிப்பகுதி என காவல் நிலையம் மற்றும் அதன் வளாகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக தீவிர தடயங்களை சேகரித்து, விசாரணை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments